யோகிபாபு நடிக்கும் முதல் வெப் சீரிஸ் சட்னி – சாம்பாரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

யோகிபாபு நடிக்கும் முதல் வெப் சீரிஸ் ‘சட்னி – சாம்பார்.’ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்துக்காக தயாராகும் இந்த சீரிஸில் யோகிபாபுவுடன் வாணி போஜன், ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், நிழல்கள் ரவி, மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத், ஆர்.சுந்தர்ராஜன், குழந்தை நட்சத்திரங்கள் இளன், அகிலன், கேசவ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் ‘மொழி’ திரைப்படம் தொடங்கி, அழுத்தமான கதையம்சத்தோடு நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதா மோகன் இந்த சீரிஸை இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினரான இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் யோகி பாபு ஒரு டைனிங் டேபிளின் மையத்தில் அப்பாவி முகத்துடன் அமர்ந்திருக்க அவரைச் சுற்றிப் புன்னகை ததும்ப மற்ற நடிகர்கள் இருக்கின்றனர். ராதா மோகன் இயக்கம், யோகிபாபு நடிப்பு, வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு என கூட்டணி பலமாக இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உருவாக்கத்தில் உறுதுணை:-

பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிப் புகழ் பெற்ற அஜேஷ் அசோக் இசையமைத்துள்ளார்.

இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் வசனங்களை எழுதியுள்ளார்.

கலை இயக்கத்தை கே கதிர் கவனிக்க, எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here