நாகசைதன்யா நடிக்க, வெங்கட்பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிற ‘கஸ்டடி’ உலகம் முழுவதும் அடுத்த வருடம் மே மாதம் மே 12-ம் தேதி வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து இந்த பட ஹீரோவின் அதிரடி ஆக்ஷன் உலகை அறிமுகப்படுத்தும் விதமாக படத்தின் க்ளிம்ப்ஸை ரசிகர்களுக்கான புது வருட பரிசாக வெளியிட்டுள்ளது.
நாகசைதன்யாவின் பயமில்லாத ஆக்ஷன் தோற்றம் மற்றும் படத்தின் சில விஷூவல்களையும் படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள க்ளிம்ப்ஸில் வசனங்கள் ஏதும் இல்லை என்றாலும் இந்த ஆக்ஷன் பேக்டு டீசர் படத்தின் தரத்தை காட்டுகிறது. இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை க்ளிம்ப்ஸின் தரத்தை மேலும் உயர்த்துவதாக உள்ளது. இது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
படம் பற்றி:-
இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்கிறார்கள். ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
‘கஸ்டடி’ மிகப் பெரிய பொருளாதார செலவில் முதல் தரத்திலான தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. நடிகர் நாக சைதன்யாவின் நடிப்பு பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான்.
மிகப்பெரிய அளவிலான இந்த கமர்ஷியல் எண்டர்டெயினர் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி படத்தைத் தயாரிக்கிறார். படத்தை பவன் குமார் வழங்குகிறார். கிரீத்தி ஷெட்டி படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.
நாகசைதன்யா பிறந்தநாளன்று படக்குழு படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை வெளியிட்டனர். போலீஸ் அதிகாரியாக நாகசைதன்யாவின் இந்த அதிரடியான தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கின்றனர்.
படக்குழு:-
கதை, திரைக்கதை, இயக்கம்: வெங்கட்பிரபு,
தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,
வழங்குபவர்: பவன் குமார்,
இசை: இளையராஜா, யுவன் சங்கர் ராஜா,
வசனம்: அபூரி ரவி,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா – D’One,
டிஜிட்டல் மீடியா: விஷ்ணு தேஜ் புட்டா