பிப்ரவரி 13 முதல் ‘சைபர் வார்’, ‘மெமரிஸ்’, ‘டைம் அவுட்’… கலர்ஸ் தமிழில் மூன்று வெப்சீரிஸ்!

சென்னை 10 பிப்ரவரி, 2023: SA20 கிரிக்கெட் போட்டியின் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை வழங்கிய கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அடுத்ததாக பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சத்துடன் சைபர் வார், மெமரிஸ் மற்றும் டைம் அவுட் ஆகிய மூன்று வெப் சீரிஸ்களை வரும் வாரங்களில் திங்கள் முதல் ஒளிபரப்ப உள்ளது.

பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 24 வரை, ஒவ்வொரு நாளும் இரவு 8:30 முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பப்படும் இந்த வெப் சீரிஸ் சைபர் கிரைம், குடும்ப நாடகம், காதல் மற்றும் மனிதாபிமான தன்மை ஆகியவற்றுக்கு இடையே தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட மூன்று பிரபலமான வூட் வெப்சீரிஸ் (Voot Webseries) ஆகும்.

இரவு 8:30 மணிக்கு தொடங்கும் மோஹித் மாலிக் மற்றும் சனாயா இரானி ஆகியோர் நடித்த 20 சீசன்கள் கொண்ட சைபர் வார் என்ற க்ரைம் த்ரில்லர் மும்பை நகரத்தில் சைபர் குற்றங்களை ஒழிப்பதே நோக்கமாக கொண்டுள்ளது. ஒருபுறம் மும்பை காவல்துறைக்கு எதிரான மால்வேர் தாக்குதலைத் தீர்ப்பது மற்றும் மறுபுறம் பிளாக்மெயில் அச்சுறுத்தல்களைக் கையாள்வது போன்ற தருணங்களில் பார்வையாளர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமூட்டும் நிகழ்வாக இக்கதை அமைந்துள்ளது.

இரண்டாவதாக, பார்வையாளர்களை இருக்கையின் நுணிக்கு கொண்டு செல்லும் ஃபேன்டஸி ரொமான்ஸ் க்ரைம் த்ரில்லரான 13 எபிசோடுகள் கொண்ட மெமரிஸ் வெப் சீரிஸ், மனித தன்மையை பற்றியதாகும். ரோஹித் ராய், சுர்லீன் கவுர் மற்றும் ப்ரியால் கோர் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸில் நாயகனால் பல இறந்தவர்களின் ரகசியங்கள், நினைவுகள் மற்றும் ஆசைகள் அனைத்தையும் அறிய முடிகிறது. பிரபலமான செய்தி தொகுப்பாளரான நாயகன் சில மர்மமான தடயங்களையும், இறந்த உடல்களின் ரகசியங்களையும் எப்படி அறிந்து காவல்துறையினருக்கு உதவுகிறார் என்ற மர்மமான திரைக்கதையை இரவு 9:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணலாம்.

இறுதியாக, ராதா மற்றும் ராகுல் என்ற இரு கதாபாத்திரங்களைப் பற்றிய ஆறு எபிசோட்கள் கொண்ட டைம்-அவுட் வெப் சீரிஸ் தொடராகும். யதார்த்தத்தை எதிர்கொள்ளும் பயம் மற்றும் அதிர்ச்சிக்கு இடையில் ராதா மற்றும் ராகுல் எவ்வாறு வழிநடத்துகிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த காதல் கதையாகும். அவர்கள் இருவரும் அவர்களது வாழ்க்கையை எவ்வாறு மாற்ற முடியும் என்பதற்கு இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு அழகான காதல் கலந்த வெப் சீரிஸ்யை இரவு 10 மணிக்கு பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here