விக்ரம் பிரபு – ஹன்சிகா நடித்துள்ள, ஒழுக்கம், உறவுகள் மற்றும் தாய் – மகன் இடையேயான மோதல் உள்ளிட்ட பல கருதாக்கங்களை கொண்ட அதிரடி திரில்லர் திரைப்படம் ‘துப்பாக்கி முனை.’ இந்த படத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, வரும் பிப்ரவரி 26 ஞாயிறன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்புகிறது.
ஒரு சிறந்த போலீஸ் மற்றும் என்கவுன்டர் நிபுணரான விக்ரம் பிரபு, கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை சுட்டு தள்ளுகிறாரா இல்லையா என்பதை சுற்றிய கதையாகும். அனுபவமிக்க கலைஞர்களான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஆடுகுளம் நரேன் ஆகியோருடன் கல்யாணி மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் துணை நடிகர்களாக இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.இளம் ஆற்றல்மிக்க என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்டான ஏசிபி. பிர்லா போஸ் (விக்ரம் பிரபு நடிப்பில்) ராமேஸ்வரத்தில் மைனர் பெண்ணான மஞ்சள் நாயகியின் (அம்மு அபிராமி நடிப்பில்) கொடூரமான கற்பழிப்பு கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு நியமிக்கப்படுகிறார். இதில் சற்றும் எதிர்பாரா விதமாக ஒரு பிஹாரி மாவோயிஸ்ட் (RJ.ஷா) தவறாக சித்தரிக்கப்பட்டு இந்தக் கொலையில் ஈடுபட்டுள்ள உண்மை குற்றவாளிகளால் குறிவைக்கப்படுகிறார். பணி இடைநீக்கத்திலிருந்து திரும்பும் என்கவுன்டர் நிபுணரான பிர்லா போஸ் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனையை வழங்கும் பொறுப்பை ஏற்று கொண்டு, பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் காதலி மைதிலி மோகன் (ஹன்சிகா மோத்வானி) உதவியோடு குற்றம் செய்த ஆசாத்தை (RJ.ஷா) காப்பாற்றி, எப்படி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து ஒப்படைக்கிறார் என்பதே மீதிக்கதை ஆகும்.படத்தைப் பற்றி இயக்குநர் தினேஷ் செல்வராஜ் கூறுகையில், “விக்ரம் பிரபு இந்த படத்தில் தனது முழு அர்ப்பணிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தோடு ஒன்றினைந்து தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை மிகவும் ஈர்த்துள்ளார்.பல சமூகக் விஷயங்கள் பற்றிய உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கையும் களவுமாகப் பிடிபட்டு கடைசியில் எப்படி நீதி வழங்கப்படும் என்பதை மையமாக வைத்த ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் கலர்ஸ் தமிழின் பார்வையாளர்களை நன்றாக இணைக்கும். முக்கியமாக எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஆடுகுளம் நரேன் போன்ற பிற கலைஞர்களும் தங்கள் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.