‘செவ்வாய் கிழமை’ என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்எக்ஸ் 100’ படத்தின மூலம் புதிய டிரென்டை அறிமுகம் செய்த அஜய் பூபதி இயக்கியுள்ள புதிய படம் இது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டில் மற்றும் கான்செப்ட் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அந்த போஸ்டரில் ஒரு இளம்பெண் வண்ணத்துப் பூச்சி வடிவிலான உடையணிந்து நடனமாடும் வகையில்சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டருக்கு வரவேற்பு குவிந்துவரும் நிலையில் படத்தைப் பற்றி பேசிய இயக்குநரும் தயாரிப்பாளருமான அஜய் பூபதி, ”செவ்வாய்கிழமை’ கான்செப்ட் அடிப்படையிலான படம். இது இந்திய சினிமாவில் இதுவரை முயற்சி செய்யப்படாத வகையைச் சேர்ந்தது. படத்தைப் பார்க்கும்போது தலைப்பின் பின்னணியில் உள்ள நியாயத்தை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். கதையில் மொத்தம் 30 கதாபாத்திரங்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பெரிய அளவில் ஒரு குறிப்பிட்ட இடம் கதையில் உண்டு. படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் பொருத்தமானது மற்றும் முக்கியமானது” என்றார். தயாரிப்பாளர்கள் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் கூறுகையில், “இது பான் இந்திய படம் அல்ல. பக்கா தென்னிந்திய படம். அஜய் பூபதி காரு ‘ஆர்எக்ஸ் 100’ மூலம் எதிர்பாராத ஆச்சரியத்தை கொடுத்தது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. அதுபோல, இந்த கான்செப்ட்டும் உற்சாகமானது மற்றும் இதன் உள்ளடக்கம் பிரமாதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘கந்தாரா’ புகழ் அஜனீஷ் லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் தயாரிப்பு பணிகளை தொடங்கினோம்” என்றார்.
படக்குழு:
நிர்வாகத் தயாரிப்பாளர்: சாய்குமார் யாதவில்லி,
கலை இயக்குநர்: ராகு குல்கர்னி,
ஒலி வடிவமைப்பாளர் & ஆடியோகிராஃபி: ராஜா கிருஷ்ணன் (தேசியவிருது பெற்றவர்),
ஒளிப்பதிவாளர்: தாசரதி சிவேந்திரா, இசையமைப்பாளர்: ‘காந்தாரா’ புகழ் பி அஜனீஷ் லோக்நாத்,
கதை, திரைக்கதை, இயக்கம்: அஜய் பூபதி.