லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திகில் காமெடி படைப்பான ‘சந்திரமுகி 2’ படத்திலிருந்து, சந்திரமுகியாக நடிக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள கங்கனா ரனாவத் கதாப்பாத்திர லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்திரமுகி பாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சந்திரமுகியாக அவரது தோற்றம், வசீகரிக்கும் அழகுடன், கர்வமிகுந்த மங்கையாக, மிரட்டலாக அமைந்துள்ளது. மிகவும் புகழ்பெற்ற சந்திரமுகியை மீண்டும் தரிசிப்பதின் மகிழ்ச்சியில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.