சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் ‘வெப்பன்’ திரைப்படம் சரியான மேக்கிங் மற்றும் முன்னேற்றத்துடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்று வருகிறது.
‘மில்லியன் ஸ்டுடியோஸ்’ எம்.எஸ். மன்சூர், தமிழ்த் திரையுலகில் திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்துடன் நல்ல தரமான படங்களை உருவாக்க வேண்டும் என்ற தீவிர விருப்பத்துடன் தனது தயாரிப்பு பயணத்தைத் தொடங்கியுள்ளார். ‘வெப்பன்’ அந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு.
இரண்டாவது தயாரிப்பாக ‘சிரோ’வைத் தொடங்குகிறது. முன்னாள் விளம்பர பட இயக்குநரும் வடிவமைப்பாளருமான விவேக் ராஜாராம் இந்த ஃபேண்டசி படத்தை எழுதி இயக்குகிறார். இந்தப் படம் மூலம் பிரார்த்தனா சாப்ரியா அறிமுகமாகிறார்.
படம் பற்றி விவேக் ராஜாராம் பேசும்போது, “நான் மன்சூர் சாருக்கும் அப்துல் சாருக்கும் ஸ்க்ரிப்டை சொன்ன போது, இருவருமே தனித்துவமான கதைக்களம் மற்றும் திரைக்கதையால் ஈர்க்கப்பட்டனர். ஸ்கிரிப்ட்டின் மீது நம்பிக்கை வைத்த இருவருக்குமே எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தின் மூலம் தனது மகள் பிரார்த்தனாவை நடிகையாக அறிமுகம் செய்ய வைத்த மீனா சாப்ரியா மேடம் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
‘சிரோ’ ஒரு கற்பனையான கதாபாத்திரம்; பெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஒரு தேவதை. நான் முதன்முறையாக பிரார்த்தனாவைச் சந்தித்தபோது, அவர் இந்த கதாபாத்திரத்திற்கு வலுவாக நியாயம் செய்வார் என்று உணர்ந்தேன்.
பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற காம்ப்ளக்ஸ் சப்ஜெக்ட்டை படம் கொண்டுள்ளது. படம் ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் வராது. ஒவ்வொரு 20 – 25 நிமிடங்களுக்கும் களம் மாறிக்கொண்டே இருக்கும். பெண்கள் அடிப்படையிலேயே மிகப்பெரிய சக்தியைக் கொண்டவர்கள் மற்றும் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் தனித்துவமான குணத்தைக் கொண்டுள்ளனர் என்ற உண்மையை இந்தப் படம் மூலம் முன்வைக்க முயற்சி செய்துள்ளேன்” என்றார்.
இந்த படத்தின் ஷூட்டிங் இந்த வருடம் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. படத்தில் பங்குபெறும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிப்பு வெளிவரும்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவு: கிஷன் சி.வி,
எடிட்டிங்: கோபி கிருஷ்ணா
தயாரிப்பு நிர்வாகி: சிவகுமார்
நிர்வாக தயாரிப்பாளர்கள்: சக்திவேல் & ரிஸ்வான்
விளம்பர வடிவமைப்பாளர்: தினேஷ் அசோக்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்