Home சினிமா 3 மணி நேரம் நான்கு பாடகர்களுடன் இணைந்து பாடுகிறேன்! -இ லவுன்ஜ் & நாய்ஸ் அண்டு...

3 மணி நேரம் நான்கு பாடகர்களுடன் இணைந்து பாடுகிறேன்! -இ லவுன்ஜ் & நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நடத்தும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி குறித்து சின்னக்குயில் சித்ரா

சின்னக்குயில் சித்ரா திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.. ‘சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற நிலையில், இவர் சின்னக்குயில் சித்ரா என்றே மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முறையாகத் தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில், இ லவுன்ஜ் மற்றும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இணைந்து வழங்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடவிருக்கிறார்.

அது குறித்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாடகி சித்ரா, ”நான் இதை எதிர்பார்க்கவில்லை, இதுவரை நான் பல இசை நிகழ்ச்சிக்குச் சென்று பாடியுள்ளேன், ஆனால் இந்த நிகழ்ச்சியை என்னைக் கொண்டாடும் நிகழ்வாக ஒருங்கிணைத்துள்ளார்கள். 3 மணி நேரம், மது பாலகிருஷ்ணன், சத்ய பிரகாஷ், திஷா பிரகாஷ், ருபா ரேவதி என நான்கு பாடகர்கள் என்னுடன் இணைந்து பாடவுள்ளனர். பாப்புலரான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடவுள்ளோம். எனக்கு இத்தனை வருடங்கள் தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. இந்த நிகழ்ச்சிக்கும் ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.

E Lounge Events சார்பில் பேசிய வெங்கட், இது இன்னிசை நிகழ்ச்சி அல்ல, நம் அனைவருக்கும் பிடித்த சித்ரா அம்மாவைக் கொண்டாடும் ஒரு விழா. 47 வருடங்களைக் கடந்து, உலகளவில் நம் அனைவரையும் அசத்தி வரும் அவரைக் கொண்டாடும் வகையில், இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். எந்த ஒரு பாடலையும் உடனடியாக ஸ்வரம் எழுதிப் பாடும் திறமை கொண்ட கலைஞர் சித்ரா அம்மா. அவர் இந்த தமிழ் மண்ணில் தான் தொடர்ந்து பாடி வருகிறார். அதனால் இந்த விழாவைச் சென்னையில், இங்கு நடத்துவது தான் சிறப்பாக இருக்கும். அவர் இந்த விழாவிற்கு ஒப்புக்கொண்டது எங்களுக்குப் பெருமை. இந்த நிகழ்ச்சியை நடத்த உதவிய கனரா வங்கிக்கு நன்றி” என்றார்.

உலகளவில் பல நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்து வழங்குவதில் புகழ்பெற்ற, ஐக்கிய அரபு எமிரேட், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் செஷில்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாராட்டு பெற்ற நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்திய E Lounge Events நிறுவனமும், திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள Noise & Grains நிறுவனமும் இணைந்து, கனரா வங்கி ஆதரவுடன் இந்த இசைக்கச்சேரி நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

‘டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள‌ ஒ ய் எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 8 சனிக்கிழமை மாலை ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது, இதற்கான நுழைவுச் சீட்டுகள் இன்ஸைடர்.இன் மற்றும் புக் மை ஷோ இணையதளங்கள் மற்றும் செயலிகளில் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்