சந்தானம் நடித்த அதிரடி வெற்றித் திரைப்படமான ‘டெவில்ஸ் டபுள்: நெக்ஸ்ட் லெவல்’ படத்தை, வரும் ஜூன் 13 முதல் ZEE5 தளம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிடி வெற்றிப்பட வரிசையில், நான்காவது பாகமாக வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல’ படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில், கலக்கல் நகைச்சுவை நாயகன் சந்தானம் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படம், அதிரடி-திகில்-நகைச்சுவை, ஜம்ப்-ஸ்கேர்ஸ், நையாண்டி மற்றும் ஸ்லாப்ஸ்டிக் ஆகிய ஜானர்களின் சுவாரஸ்யமான கலவையாக, அனைத்து வகை ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில், உருவாகியுள்ளது. இறந்துபோன திரைப்பட இயக்குநரின் பழிவாங்கும் எண்ணத்தால், ஒரு திரைப்படத்திற்குள் சிக்கிக்கொள்ளும் விமர்சகன், அங்கு இருக்கும் டைரியின் சக்தியை மீறி, அந்த மாயாஜால சக்தியை மீறி, ஜெயிக்கிறானா ? படத்திலிருந்து வெளியில் வந்தானா? என்பது தான் இப்படத்தின் மையம்.
இறந்துபோன திரைப்பட இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படி வெளியில் வருகிறான் என்பது தான் இப்படத்தின் கதை.
ஓடிடி வெளியீடு பற்றி பேசிய நடிகர் சந்தானம், “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தில் நடித்த கிஸ்ஸா கதாபாத்திரம், சமீப காலங்களில் நான் ஏற்று நடித்ததிலேயே மிகவும் திருப்திகரமான கதாபாத்திரமாக்கும். கிஸ்ஸா தைரியமானவன், விசித்திரமான குணங்கள் நிறைந்தவன். கிஸ்ஸா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது மிகுந்த சவால் வாய்ந்ததாகவும், சந்தோசமான அனுபவமாகவும் இருந்தது. இப்போது இப்படம் ZEE5 மூலம் உலகமெங்குமுள்ள பார்வையாளர்களைச் சென்றடைவது மகிழ்ச்சி. நீங்கள் இதுவரை பார்த்த திரைப்படங்களைத் தாண்டி, இந்தப்படம் உங்களை அடுத்த லெவலுக்கு கூட்டிச் செல்லும்” என்றார்.