அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமாக, மெகா ப்ளாக்பஸ்டர் டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது ‘டிமான்ட்டி காலனி 2.’
அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவான இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. முன்னதாக படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் அஜய் ஞானமுத்து, பிரியாவுக்கு மிக முக்கியமான ரோல். அவர் கேரியரில் முக்கியமான படமாக இப்படம் இருக்கும். சாம் சி எஸ் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல ஒரு இயக்குநராகவும் படத்தை அணுகுகிறார். ஒளிப்பதிவாளர் ஹரீஷ் என்னுடன் நின்றார். அருண் பாண்டியன் சார் மிகவும் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தார். என் கோப்ரா படம் சரியான ரிவ்யூ இல்லை. அந்த நேரத்தில் உடனே என்னைத் தேடி வந்தார் அருள்நிதி சார், தூக்கிப்போடு அடுத்த படம் பண்ணலாம் என்றார். இப்படி ஒரு தோள் கிடைக்க ஆசீர்வாதம் வேண்டும்” என்றார்.
நாயகி பிரியா பவானி சங்கர், போன வருடம் இந்தப்படம் ஆரம்பித்தோம் அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. இந்த கதாபாத்திரம் தந்ததற்கு இயக்குநர் அஜய்க்கு பெரிய நன்றி. அருள்நிதியுடன் இரண்டாவது படம். படம் கண்டிப்பாக அனைவரையும் மிரட்டும்படி இருக்கும்” என்றார்.
நிகழ்வில் தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன், பிடிஜி யுனிவர்சல் நிறுவனத் தலைவர் மனோஜ் பெனோ, ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் விஜய் சுப்பிரமணியன், ஞானமுத்து பட்டறை சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ராஜ்குமார், நடிகர் அருண் பாண்டியன், நடிகர் முத்துக்குமார், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், இசையமைப்பாளர் சாம் சி எஸ். உள்ளிட்டோரும் பேசினார்கள்.