ஏழு நாட்களில் உலகளவில் 300 கோடி வசூல் சாதனை எட்டிய ஷாருக்கானின் ‘டங்கி.’

ஷாருக்கான் நடிப்பில், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், இதயம் வருடும் ஆழமான கதையால், தேர்ந்த நடிகர்களின் பங்களிப்பால் ‘டங்கி’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தின் கதை உலகம் முழுதுமுள்ள பார்வையாளர்களின் வாழ்வியலைச் சொல்வதால் அவர்களுக்கு நெருக்கமான படைப்பாக அமைந்திருக்கிறது

திரையரங்குகளுக்கு குடும்ப பார்வையாளர்கள் முதல் அனைத்து வயதினரையும் கவர்ந்துள்ளது டங்கி. இப்படம் இந்தியாவில் மட்டும் 150 கோடியைத் தாண்டியுள்ளது மேலும் உலக பாக்ஸ் ஆபிஸில் 300 கோடியை வெறும் 7 நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here