ஒரே வருடத்தில் 3-வது முறையாக சாதித்த ஷாருக்கான். இந்தியாவில் 200 கோடி, உலகளவில் 400 கோடி கிளப்பில் நுழைந்த டங்கி!

ஷாருக்கானின் டங்கி கடந்த டிசம்பர் 21-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தொடர்ந்து ஆதிக்கம் செய்து வருகிறது! இந்தியாவில் 203.08 கோடி மற்றும் உலகளவில் 409.89 கோடியை குவித்துள்ளது.!

ராஜ்குமார் ஹிரானியின் அன்பை பொழியும் அற்புதமான படைப்பான டங்கி ரசிகர்களின் இதயங்களை மட்டுமல்ல பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற இப்படம் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பொருத்தமான, நெருக்கமான படைப்பாக அமைந்துள்ளது.

பார்வையாளர்களிடமிருந்து வரும் பாசிட்டிவ் வார்த்தைகளுடன் டங்கி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. நகைச்சுவை மற்றும் அழுத்தமான கதை, பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ள டங்கி, குடும்பங்களை கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு அழைத்து வருகிறது. இந்த குடும்ப பொழுதுபோக்கு படம் வசூலில் இந்தியாவில் மட்டும் 200 கோடியைத் தாண்டியுள்ளது. மேலும் உலகம் முழுவதுமாக 400 கோடியைத் தாண்டியுள்ளது. தற்போது அனைவரும் விரும்பும் ஆக்‌ஷன் இல்லாத படமாக இருந்தாலும், காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளால் நிரம்பிய ராஜ்குமார் ஹிரானியின் சினிமாவுக்கு சான்றாக அமைந்துள்ள இப்படம், வசூலிலும் அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது.

இப்படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு நடித்துள்ளது.

https://www.instagram.com/p/C1oocBZtKsZ/?igsh=YTBrcTZsNzZvZWcz

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here