நடிகை தேவயானி ஷர்மா டெல்லியை பூர்விகமாக கொண்டவர்; ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் வலம் வருகிறார்.
2021-ல் ‘ரொமான்டிக்’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பலவிதமான நாட்டியக் கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
அவரிடம் பேசியபோது, ‘‘ஹிந்தி , தெலுங்கு மொழிகளில் நடித்தாலும் எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது. சாதாரண கதாநாயகியாக வந்துபோகாமல் என் நடிப்புத் திறனை முழுவதும் வெளிப்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் நடிகையாக வலம் வர வேண்டும். கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள். அவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம். வாழ்வில் என்னுடைய லட்சியம் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதுதான். அதற்கான வாய்ப்புகளை பெற முழு வீச்சில் இறங்கியுள்ளேன்” என்றார்.
லட்சியத்தை மனதில் வைத்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ள தேவயானி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழிகளிலும் புகழின் உச்சம் தொடப்போவது உறுதி!