மாபெரும் திரை ஆளுமைகள் தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்மூலா இணையும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

தேசிய விருது பெற்ற தனுஷ், தெலுங்கு சினிமா முன்னணி நட்சத்திரம் நாகார்ஜுனா அக்கினேனி இணையும் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் சேகர் கம்முலா இயக்கவிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா மூன்று பேரின் முதல் எழுத்தையும் சேர்த்து தற்காலிகமாக DNS என பெயர் சூட்டப்பட்டு பூஜை நிகழ்வு நடந்தது.

நிகழ்வில் படத்தில் பங்களிப்பு தருகிறவர்களுடன் தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு படத்தின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் வசனங்கள் நிறைந்த சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன.

தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவின் சங்கராந்தி வெளியீடுகளான கேப்டன் மில்லர் (தமிழ்) மற்றும் நா சாமி ரங்கா (தெலுங்கு) மூலம் பிரமாண்ட வெற்றியை வழங்கியதால், இந்த முன்னணி நடிகர்கள் இணையும் பிரம்மாண்டமான காவியத்தைப் பற்றிய உற்சாகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இரு நட்சத்திரங்களின் ரசிகர்களும், அவர்கள் திரையை பகிர்ந்து கொள்வதை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ஃபிடா மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய இரண்டு தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த பிறகு, சேகர் கம்முலா பெரிய அளவிலான படைப்புடன் வருகிறார். தொழில்நுட்ப அம்சங்களிலும் படம் உறுதியுடன் சிறந்து விளங்கும்.

தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ராமகிருஷ்ணா சபானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்க, சர்வதேச சண்டைப் பயிற்சி இயக்குநரான யானிக் பென் ஆக்‌ஷன் பகுதியை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
படக்குழு:
இயக்குநர்: சேகர் கம்முலா
படத்தை வழங்குபவர்: சோனாலி நரங்
தயாரிப்பு: ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பாளர்கள்: சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ்
ஒளிப்பதிவு இயக்குனர்: நிகேத் பொம்மி
தயாரிப்பு வடிவமைப்பு: ராமகிருஷ்ணா சபானி, மோனிகா நிகோத்ரே
விளம்பரங்கள்: வால்ஸ் மற்றும் டிரென்ட்ஸ்

மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here