மந்திர தந்திரங்கள் பற்றி வெறெந்த படத்திலும் பார்க்காததை இதில் பார்ப்பீர்கள்! -சொல்கிறார் ‘டெவில் ஹன்டர்ஸ்’ பட இயக்குநர் பிரஜித் ரவீந்திரன்

தந்திர சாஸ்திரத்தில் கால் நூற்றாண்டு கால அனுபவமுள்ள பிரஜித் ரவீந்திரன், தனது வாழ்வில் நடந்த சில உண்மை சம்பவங்களை தழுவி எடுத்திருக்கும் படம் ‘டெவில் ஹன்டர்ஸ்.’

ருத்ரேஸ்வர் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் உண்மையில் மாந்திரீகம் செய்யக் கூடியவர்களாம்.

இயக்குநரிடம் படம் பற்றி கேட்டபோது, ”ஹாரர் த்ரில்லர் படைப்பாக உருவாகியுள்ள இந்த படம் மந்திர தந்திரங்கள் பற்றியும் ஆவிகள் பற்றியும், இறந்து போனவர்கள் பற்றிய தவறான நம்பிக்கைகள் குறித்தும் பேசுகிறது. இறந்துபோனவர்கள் ஆவியாக மாறி என்ன செய்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் விதத்தில் அறிவியல் புனைவு கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மந்திர தந்திரங்கள் பற்றி இந்திய அளவில் வேறெந்த படங்களிலும் இல்லாத ஒன்றை இந்த படத்தில் பார்ப்பீர்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here