ஜெயம் ரவி, ‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஏர் மீரா மஹதி இயக்கத்தில், ஏர் ஃபிளிக் தயாரிப்பில், வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட் சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், டெடி கோகுல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்.’
இந்த படம் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. முன்னதாக படத்தின் இசை வெளியீடு கடந்த மார்ச் 15; 2024அன்று மாலை சென்னையையடுத்த சாய்ராம் கல்லூரியில் 8000 மாணவர்கள் முன்னிலையில் ஆரவாரம் பொங்க பிரமாண்டமாக நடைபெற்றது.
இயக்குநர் மீரா மஹதி பேசியபோது, “என்னுடைய முதல் படத்திற்கு இசையமைத்து எனக்கு மிகப்பெரிய பெருமையை வழங்கி இருக்கிற வித்யாசாகர் சாருக்கு நன்றி. இங்கு வந்து சிறப்பித்துள்ள இரண்டு ரவிகள் ஆகிய ஜெயம் ரவி சார் மற்றும் இயக்குநர் ரவிக்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி.
இளம் தலைமுறையாகிய உங்களை நம்பித்தான் இந்தியாவிலேயே புதிய முயற்சியாக ‘டபுள் டக்கர்’ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். கிராபிக்ஸ் கதாபாத்திரங்களை நடிகர்களுடன் நடிக்க வைத்துள்ளோம். உங்கள் குடும்பத்துடன் வந்து இப்படத்தை ரசிக்கலாம்” என்றார்.
நிகழ்வில் படத்தின் நாயகன் தீரஜ், நாயகி ஸ்முரிதி வெங்கட், நடிகர் ஜெயம் ரவி, ‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமார், இசையமைப்பாளர் வித்யாசாகர், நடிகர் எம் எஸ் பாஸ்கர், நடிகர் காளி வெங்கட், நடிகர் கருணாகரன், திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் மற்றும் இணை எழுத்தாளர் சந்துரு, நிர்வாக தயாரிப்பாளர் எஸ் சேதுராமலிங்கம், ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன், படத்தொகுப்பாளர் வெற்றிவேல் ஏ எஸ், கலை இயக்குநர் சுப்பிரமணிய சுரேஷ் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.