மேளதாள, வாணவேடிக்கைகளுடன் ‘டங்கி’யின் முதல் காட்சியை தெறிக்கவிட்ட ஷாருக்கான் ரசிகர்கள்! மும்பையில் கரைபுரண்ட உற்சாகம்.

கிங்கான் ஷாருக்கான் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்திருக்கும் முதல் படம் ‘டங்கி.’

இந்தியாவில் இந்த படத்தின் முதல் காட்சி (FDFS) டிசம்பர் 21;2023 அன்று அதிகாலை 5.55 மணிக்கு மும்பையின் அடையாளமாக திகழும் கெயிட்டி கேலக்ஸி திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது ரசிகர்கள் அவர்களுக்கே உரிய பாணியில் கொண்டாடி எல்லையற்ற மகிழ்ச்சியை உறுதிப்படுத்தினர்.

இது தொடர்பாக இணையத்தில் ஷாருக் கானின் ரசிகர்கள் ஏராளமான காணொளிகளை பகிர்ந்து வருகிறார்கள். அதில் மேளதாளத்துடனும், வானவேடிக்கைகளுடனும் பட வெளியீட்டை அவர்கள் கொண்டாடுவதற்காக திரையரங்குகளில் ஒன்று கூடியதை காண முடிந்தது. இந்த திரையரங்க வளாகத்தில் ஷாருக்கானின் பெரிய கட்அவுட் ஒன்றும் இருந்தது.

தற்போது X‌ என அழைக்கப்படும் ட்விட்டரில் ரசிகர்கள் பகிர்ந்துள்ள வீடியோக்களில் ஷாருக்கின் ரசிகர்கள் ஒன்றாக நடனம் ஆடுவதை காண முடிகிறது. அதே நேரத்தில் மேளதாளத்தின் ஒலிக்கு ஏற்ப நடனமாடி தங்களின் மகிழ்ச்சியான மனநிலையையும் வெளிப்படுத்தினர். ஒரு சில ரசிகர்கள் டங்கி என எழுதப்பட்ட பதாகையை உயர்த்திப் பிடித்து இருப்பதையும் காண முடிந்தது. பட்டாசு வெடிப்பதற்காக சிறிய மேடை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தின் பிரீமியர் காட்சிக்காக காத்திருந்த ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வெளியே நடனமாடிக் கொண்டிருந்தனர். இது தொடர்பான காணொளிகளை தொடர்ந்து கீழே காணலாம்.

https://x.com/iamsrk/status/1737624014255001741?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA

https://x.com/srkuniverse/status/1737619382187262274?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA

https://x.com/srkuniverse/status/1737628937893945785?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA

https://x.com/srkuniverse/status/1737627311779008718?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA

இந்த வீடியோக்களுக்கு ஷாருக்கான் மகிழ்ச்சியுடன் பதிலளித்திருக்கிறார். படத்தின் வெளியீட்டிற்காக தயாராக இருந்த நடிகர் ஷாருக்கான்.. மும்பை
கெயிட்டி கேலக்ஸியில் ரசிகர்களின் வீடியோக்களை தன்னுடைய இணைய பக்கத்தில் மறு பதிவு செய்து, ” நன்றி தோழர்களே மற்றும் தோழிகளே.. இது ஒரு நல்ல நிகழ்ச்சி மற்றும் #டங்கி மூலம் நீங்கள் அனைவரும் மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்” என பதிவிட்டிருக்கிறார். நியூசிலாந்தில் உள்ள பார்வையாளர்கள் மட்டுமல்ல மேலும் பலரும் இதற்கான எதிர்வினைகளை இணையத்தில் பகிர தொடங்கியுள்ளனர். படம் வெளியான தருணத்திலிருந்து சிறந்த விமர்சனங்களும் பகிரப்பட்டு வருகின்றன.

ஷாருக் கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்தயேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் டங்கியில் இணைந்திருக்கிறார்கள்.

இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதி இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here