இன்று இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி, நடிகர் சந்தானம் என இருவரின் பிறந்த நாள். அதையொட்டி அவர்கள் இருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை அதிகாரி ஜிகேஎம் தமிழ்க்குமரன், தயாரிப்பாளர் ரோமியோ ஃபிக்சர்ஸ் ராகுல், தயாரிப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். அம்பேத் குமார், தயாரிப்பாளர் கே. விஜய் பாண்டி,நடிகர் விச்சு ஆகியோர் கலந்து கொண்டனர்.