நேச்சுரல் ஸ்டாரோடு சந்தோஷ் நாராயணன் துள்ளல் நடனம்… தசரா படத்தின் தீக்காரி பாடலுக்கு குவியும் வரவேற்பு!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தசரா.’

இந்த பான் இந்திய படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது ‘தீக்காரி தூரம் ஆக்குறியாடி’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. நாயகனின் காதல் வலியைச் சொல்லும் வரிகள் மனம் வருடும் மென்சோக பாடலாக உருவாகியுள்ளது.

அந்த பாடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நானியுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

இந்த படத்தில் நானியுடன் கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் மார்ச் 30-ம் தேதி வெளியாகிறது.

படக் குழு:

இயக்கம் – ஸ்ரீகாந்த் ஒதெலா
தயாரிப்பு – சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ்
ஒளிப்பதிவு – சத்யன் சூரியன் ISC
இசை – சந்தோஷ் நாராயணன்
எடிட்டர் – நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் – அவினாஷ் கொல்லா
நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜய் சாகந்தி
சண்டைப்பயிற்சி – அன்பறிவு
மக்கள் தொடர்பு – சதீஷ்குமார், சிவா (Aim)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here