‘தேஜாவு’ படத்தை தொடர்ந்து அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் இரண்டாவது படத்தில் அஸ்வின் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்துக்கு தர்புகா சிவா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘கிடாரி’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘முதல் நீ முடிவும் நீ’ ஆகிய படங்களின் பாடல்களில் தனது இனிய இசை மூலம் கவனிக்க வைத்தவர் இவர். தர்புகா சிவாவுடன் பணியாற்றுவது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும், அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பக்கபலமாக அமையுமென்றும் தயாரிப்பாளர் ழென் ஸ்டுடியோஸ் புகழ் தெரிவித்தார்.
இந்த படத்தில், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, பட தொகுப்பாளராக அருள் சித்தார்த் ஆகியோர் பணியாற்றவிருக்கின்றனர்.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி வரும் நாட்களில் தெரியவரும்.