‘கர்ணன்’ தனுஷ் – மாரி செல்வராஜ் வெற்றிப்பட கூட்டணியின் புதிய படம்! பிரமாண்டமாக உருவாகிறது.

ஆதிக்க சாதியின் கொடூர முகத்தை தனித்துவமான திரைமொழியில் ரசிகர்களுக்கு கடத்திய படங்களில் ஒன்று ‘கர்ணன்.’ அந்த படத்தின் கதைநாயகன் தனுஷும், இயக்குநர் மாரி செல்வராஜும் மீண்டும் இணைகிறார்கள். அதற்கான அறிவிப்பு வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.ha paதனுஷின் சினிமா வரலாற்றில், மிகப்பெரும் பொருட்செலவில், மிக பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

இந்த புதிய படத்தை ஜீ ஸ்டுடியோஸ் (ZEE Studios), தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் (Wunderbar Films) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தனுஷுன் வுன்டர்பார் நிறுவனம் சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த படம் மூலம் தயாரிப்பில் இறங்குகிறது. படத்தில் பங்களிக்கவிருக்கும் பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here