‘டபுள் இஸ்மார்ட்’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. ராம் பொதினேனியின் பிறந்தநாளில் ரசிகர்கள் உற்சாகம்!

வசூலில் மாபெரும் சாதனை படைத்த ‘இஸ்மார்ட் ஷங்கர்’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மீண்டும் இணைகின்றனர்.

இஸ்மார்ட் ஷங்கரின் அடுத்த பாகமாக உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ‘டபுள் இஸ்மார்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் முதல் பாகத்தை காட்டிலும், இரட்டிப்பு மாஸ் மற்றும் இரட்டிப்பு பொழுதுபோக்கைக் கொண்டிருக்கும் வகையில் ஒரு அதிரடியான கதையை பூரி ஜெகன்நாத் எழுதியுள்ளார். படம் பிரமாண்டமாக மிகப்பெரும் பட்ஜெட்டில், உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் தயாரிக்கப்படவுள்ளது. படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரிக்கின்றனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றவுள்ளார்.

இந்த நிலையில் உஸ்தாத் ராம் பொதினேனியின் பிறந்தநாளை (மே 15) கொண்டாடும் விதமாக படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் போஸ்டரில் திரிசூலங்கள் ரத்தம் தெறிக்கக் காட்சியளிக்கிறது. அது படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய சிறு அறிமுகத்தை எடுத்துக் காட்டுகிறது.

இந்த படம் பான் இந்தியா வெளியீடாக, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மார்ச் 8, 2024 மகா சிவராத்திரி தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here