கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தி.மு.க மகளிர் அணி சார்பில் இன்று (4.6. 2023) காலை சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த ’பராசக்தி’ படம் திரையிடப்பட்டது.
நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, நடிகர் இளைய திலகம் பிரபு, திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி எஸ்.முருகன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு, கழக மகளிரணி தலைவர் விஜயா தாயன்பான், கழக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி மற்றும் கழக நிர்வாகிகள், திரளான தொண்டர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர்.