நடிகர் தனுஷ் பிறந்தநாளில் 1500 பேருக்கு பிரியாணி பரிமாறி மகிழ்ந்த ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்வைத்து சாலிகிராமம் அருணாச்சலம் ரோட்டில் அமைந்துள்ள பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக மக்களுக்கு இலவச மதிய உணவு வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 28 தனுஷ் பிறந்தநாளில் பொதுமக்களுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், கேசரி, பூரி ஆகியவை கிட்டத்தட்ட 600 பேருக்கு வழங்கப்பட்டது.

மட்டுமல்லாமல் மதிய உணவாக 1500 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அனைத்திந்திய தலைமை மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா உடன் இருந்து துவங்கி வைத்தார். திரளான பொதுமக்கள் நெகிழ்ந்து தனுஷை வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here