ஜெயா தொலைக்காட்சியில் நாள்தோறும் காலை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘காலை மலர்.’ இதில் புதிதாக இடம்பெறவிருக்கும் பகுதி ‘தினமும் என்னை கவனி’.
இந்த புதுவிதமான ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி நிகழ்ச்சி, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 7.20 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
நிகழ்ச்சியில் தண்ணீர் பாட்டில், நாற்காலி, கரண்டி போன்ற அன்றாட நாம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி செய்வது எப்படி என்று செய்முறை செய்துகாட்டுகிறார் உடற்பயிற்சி நிபுணர் திவ்யா. நிகழ்ச்சியை நெறிப்படுத்தி இயக்குகிறார் அனுஷா.