தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி ராஷ்மிகா!

தமிழ்த் திரையுலகில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலாவுடன் தனது 51-வது படத்திற்காக கைகோர்த்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இது தனுஷ், சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP ஆகியோருடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து பணியாற்றும் முதல் படம்.

தனது விதிவிலக்கான படங்களுக்காக மிகவும் அறியப்பட்ட இயக்குநர் சேகர் கம்முலா முன்னப்போதும் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷை இந்த படத்தில் காட்டும் விதமாக தனித்தன்மையான கதையை எழுதியுள்ளார்.

இப்படத்தில் பங்குபெற உள்ள மிகப்பெரிய கலைஞர்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

ஸ்ரீ நாராயணன் தாஸ் நாரங் அவர்களின் ஆசியுடன் சுனில் நாரங் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா LLP (ஆசியன் குரூப்பின் ஒரு பிரிவு) மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் இந்த படம் தயாராகிறது. சோனாலி நாரங் இந்த படத்தை வழங்குகிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here