அசல் கோலார், ஷிவாங்கி இணைந்து பாடிய ‘டிக்கி டிக்கி டா’ சுயாதீன பாடல் வெளியீடு! தர்புகா சிவா இசை, இயக்கத்தில் உருவாகியுள்ளது.

இசையுலகில் தனித்துவம் வாய்ந்த முன்னணி ஆடியோ நிறுவனமான ‘சரிகம’ அசல் பாடல்களையும், சுயாதீன இசை ஆல்பங்களின் வீடியோவையும் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது ‘டிக்கி டிக்கி டா’ எனும் பெயரில் சுயாதீன பாடல் ஒன்றையும், அதற்கான பிரத்யேக காணொளியையும் வெளியிட்டிருக்கிறது.

பாடலை மதன் கார்க்கி மற்றும் பாடலாசிரியரும், பாடகருமான அசல் கோலார் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். பாடகருமான தர்புகா சிவா இசையமைத்து இயக்கியிருக்கிறார்.‌ அசல் கோலார், தர்புகா சிவா, ஷிவாங்கி ஆகியோர் இணைந்து பாடி, ஆடி நடித்திருக்கிறார்கள்.

மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, ‘எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட்’ எனும் நிறுவனமும், ‘டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ்’ எனும் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கின்றன.

‘சரிகம லெட்ஸ் கோ லைவ்’ நிகழ்ச்சியில் இந்த பாடல் வெளியிடப்பட்டது.

‘ஃபங்க் சாங்’ பாணியில் தயாராகியிருக்கும் இந்த பாடலில் அசல் கோலாரின் ராப் இசை பாடல்கள் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. பாடலின் மெட்டு மெல்லிசையோடு இணைந்திருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்திருக்கிறது.

பாடல் சரிகம ஒரிஜினல்ஸாக வெளியாகியிருப்பதால், விரைவில் பல மில்லியன் பார்வையாளர்களால் விரும்பி பார்வையிடப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here