நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா நடிக்கும் ‘டெவில்’ படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 19-ல் ரிலீஸ்!

நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் தனித்துவமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது அவர் மற்றுமொரு சுவாரஸ்யமான திரைக்கதையுடன் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் இப்படத்திற்கு ‘டெவில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் என்ற டேக்லைனுடன் வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் நவம்பர் 24, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. அதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘மாயே செஸி’ என்ற முதல் பாடல் வரும் செப்டம்பர் 19 அன்று வெளியிடப்படவுள்ளது. பாடல்கள் ICON MUSIC-ல் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here