புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி நடித்து வெளியான எவன்’ இந்த வருடத்தின் வெற்றிப் படமாக அமைந்து அவரை மகிழ்வித்தது. அதை தொடர்ந்து அவர் நடித்து முடித்துள்ள சாகாவரம்’ திரைப்படம் இறுதிக்கட்டப் பணியில் உள்ளது. அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் ஆண்டனி’ என்ற படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்த இரு படங்களும் பான் இந்தியா வெளியீடாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் அடுத்த வருடம் மிக பிரமாண்டமாக வெளியாகவிருக்கின்றன.
தான் நடித்த படங்கள் அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் உற்சாகத்தோடு, அப்பாவாகப் போகிற உற்சாகமும் திலீபன் புகழேந்தியை தொற்றிக் கொண்டிருக்கிறது!
திலீபன் புகழேந்தி, மலையாள சோசியல் மீடியா பிரபலமான அதுல்யா பாலக்கல் என்பவரை காதலித்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து அதுல்யா தாய்மையடைந்துள்ளார். வரும் பிப்ரவரியில் தங்களது வாரிசை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.