ஷாருக்கான் நடிக்க, ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் அட்டகாச படைப்பாக உருவாகியுள்ள படம் ‘டங்கி.’
வரும் டிசம்பர் 21; 2023 அன்று உலகம் முழுக்க வெளியாகவுள்ள இந்த படத்தின் இசைப்பயணத்தை ‘லுட் புட் கயா’ என்ற முதல் பாடலை வெளியிட்டு துவங்கியிருக்கிறது படக்குழு.
படத்தின் கதைப்படி கதைநாயகி ஹார்டிக்காக உலகை எதிர்த்து நிற்கும் மனு மீது ஹார்டி காதலில் விழும் தருணத்தில் இந்தப் பாடல் துவங்குகிறது. மனு மீதான அவனது உணர்வுகள் கவிதையாக பாடல் முழுதும் நிரம்பியிருக்கிறது.
புகழ்மிகு நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில், அழகான நடன அசைவுகளுடன், காதல் மேஜிக்குடன் துள்ளலான உணர்வைத் தருகிறது இந்தப் பாடல்.
அரிஜித்தின் ஆத்மார்த்தமான குரலில், ப்ரீதமின் இதம் தரும் இசையில், அழகான காதல் பயணத்தை நுணுக்கமாக விவரிக்கும் இந்தப் பாடலில் ஷாருக்கானின் அக்மார்க் ரொமான்ஸை கண்டுகளிக்கலாம்.
இந்த படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, பல காவியப்படைப்புக்களை வழங்கியுள்ளார். இந்த முறை மனம் நிறைந்து, புன்னகை பூக்கும் மற்றுமொரு அழகான ரத்தினமான படைப்பாக டங்கி மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கவிருக்கிறார்.