இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா வாகை சூடவா, குட்டிப்புலி, நையாண்டி, அறம், தீரன் அதிகாரம் ஒன்று, குரங்கு பெடல், ஆயுதம் என பல்வேறு படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர்.
அவர் தற்போது திரௌபதி அம்மனுக்கான பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார். அலங்கு படத்தின் மூலம் புகழ்பெற்ற ஹீரோவான குணாநிதி அவர்களின் இயக்கத்திலும், அதே படத்தின் தயாரிப்பாளரான சங்கமித்ரா அதாவது அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் தயாரிப்பிலும் உருவாகி உள்ளது. கு கார்த்திக் எழுதிய இந்தப் பாடல் வரிகளை ஸ்ரீதர் ரமேஷ், கோல்ட் தேவராஜ், ரோஷினி ஜெ கே வி, கனகலட்சுமி சுச்சாரிதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த பாடல் வரும் மே 1-ம் தேதி மாமல்லபுரம் அருகில் திருவிடந்தை என்ற கிராமத்தில் பாமக சார்பில் நடைபெற இருக்கும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடுக்காக பிரத்தியேகமாக தயார் செய்துள்ளனர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பாடலிலிருந்து கரகம் ஏந்தி வரோம் / பரம்பரை வாழணுமே நெருப்பில் ஆடிவரோம் / தீமை பொசுங்கணுமே வரங்கள் தா தேவி பாஞ்சாலி… என சில வரிகளை வெளியிட்டுள்ளார்.
https://x.com/ghibranvaibodha/status/1920764685533802950
https://x.com/draramadoss/status/1920705562930458942
அவரது பதிவு இணையத்தில் தீயாக பரவி வருகிறது.