திலீபன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தீப்தி மானே நடித்திருக்கும் படம் ‘எவன்.’ அறிமுக இயக்குநர் துரைமுருகன் தயாரித்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜே. கே. சஞ்சீத், உஜ்ஜைனி ராய், கானா பாலா, பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‘சன் லைட் சினிமாஸ்’ எனும் பட நிறுவனம் சார்பில் அறிமுக இயக்குநர் துரைமுருகன்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”தமிழ் சினிமாவில் அம்மா – மகன் உறவை மையப்படுத்தி ஏராளமான படங்கள் வந்திருக்கலாம். ஆனால், இந்த படத்தில் அம்மா – மகன் உறவை புதுவிதமான கோணத்தில் காட்டும் விதமாக திரைக்கதை அமைத்திருக்கிறோம். அதாவது கதையின் நாயகன் அம்மாவிற்காக உயிரையும் கொடுப்பான். உயிரையும் எடுப்பான் இதுதான் இந்த படத்தின் ஒரு வரி கதை.
இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதற்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு முறை கூத்துப் பட்டறைக்கு போனபோது என் கண்ணில் பட்டு ஷண நேரத்தில் மனதில் கதாபாத்திரமாக பதிந்தவர் தான் திலீபன். விசாரித்த போது, அவர் புலவர் புலமைப்பித்தனின் பேரன் என்று தெரிந்தது. பொருத்தமான நபரை தான் திரையுலகில் அறிமுகப்படுத்துகிறோம் எனும் உற்சாகம் ஏற்பட்டது.
படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்பாக தயாராகி இருக்கிறது. பல தடைகளை கடந்து ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகிறது” என்றார்.
முறையாக சண்டைப் பயிற்சி பெற்ற திலீபன் அறிமுகப் படத்திலேயே சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார். 20-வது மாடியில் இருந்து குதிக்கும் காட்சியில் நடிகர் ஜாக்கிஜானை போல ஒரே டேக்கில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். இரு சக்க , நான்கு சக்கர வாகனங்களில் நடிகர் அஜித்தை போல வித்தை காட்டும் திறமை படைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படக்குழு:-
இசை – ஏ.கே. சசிதரன்
பாடல்கள் – மறைந்த புலவர் புலமைப்பித்தன், விவேகா, கானா பாலா, ஏகா ராஜசேகர்
ஒளிப்பதிவு – சிவராமன்
படத்தொகுப்பு – பாலா