இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் ‘வின் ஸ்டார்’ விஜய் நடித்துள்ள படம் ‘எப்போதும் ராஜா.’
இந்த படத்தின் முதல் பாகம் வரும் ஜூலை மாதம் 7-ம் தேதி வெளிவரவுள்ளது. அதையொட்டி படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.முரளி ராமசாமி வெளியிட்டார்.நிகழ்வின்போது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் சௌந்தர பாண்டியன் தயாரிப்பாளர் என்.விஜய முரளி, வி,பழனிவேல், எஸ். ஜோதி, ஒளிப்பதிவாளர் எ.சி.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.