ரிலீஸுக்கு தயாராய் ‘ஈடாட்டம்.’ குடிப்பழக்க அடிமைகளின் உளவியலை புலனாய்வு திரில்லராக பார்க்கும் அனுபவம் விரைவில் தியேட்டர்களில்!

குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் உளவியலை புதுமையான கோணத்தில் அணுகியிருக்கும் படம் ‘ஈடாட்டம்.’

புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் சின்னத் திரையின் முன்னணி நட்சத்திரமும், பெரிய திரையில் வளர்ந்து வரும் நடிகருமான ஸ்ரீகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதை களத்திற்கும், புதுமையான கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு எப்போதுமே உண்டு என்பதை நன்கறிந்து அதற்கேற்றபடி கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஈசன்.

படத்தில் வெண்பா, அணுகிருஷ்ணா, தீக்‌ஷிகா ஆகிய மூன்று பேர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராஜா, விஜய் விசித்திரன், காதல் சுகுமார், பவர் ஸ்டார், பூவிலங்கு மோகன், விஜய் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் பேசும்போது, ”கதையின் நாயகனான சரவணன், யாஷிகா என்ற பணக்கார பெண்மணியின் வீட்டில் கார் டிரைவராக குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், பணத் தேவைக்காக திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார்.

பிறகு பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கவும் தொடங்குகிறார். இந்த சூழலில் மூவர் கொலை செய்யப்படுகிறார்கள். அதிலிருந்து அவர் தப்பிக்கிறாரா என்பதே கதை. சுவாரஸ்யம் குறையாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த படம் தயாராகி இருக்கிறது. படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது” என்றார்.

இந்த நிலையில் வரும் ஜூன் 14.6.2023 அன்று ‘ஈடாட்டம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது.

படக்குழு:-
தயாரிப்பு – ஈசன் மூவிஸ் சக்தி அருண் கேசவன்
ஒளிப்பதிவு – ஜேசன் வில்லியம்ஸ்
இசை – ஜான் பீட்டர்
படத்தொகுப்பு – ஜென் முத்துராஜ்
கலை இயக்கம் – செந்தில்
மக்கள் தொடர்பு – சிவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here