அஞ்சலியின் 50-வது படமாக உருவாகும் ‘ஈகை.’ துவக்க விழாவில் இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி பங்கேற்பு.

அஞ்சலி நடிக்கும் 50-வது படம் ‘ஈகை.’ இந்த படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, ‘புஷ்பா’ பட வில்லன் சுனில், இளவரசு, புகழ், அபி நட்சத்திரா, நிஷாந்த் ரகு, கிருஷ்ண சந்தர், காஷ்யப் பார்பயா, புதுமுக நடிகர் ஹரி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் அசோக் வேலாயுதம் இயக்கும் இந்த படத்தை ‘கிரீன் அமூசிமென்ட்’ மற்றும் ‘D3 புரொடக்சன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் தயாரிக்கின்றன.

இந்த படத்தின் துவக்க விழா 22.6.2023 அன்று சென்னையில் நடந்தது. நிகழ்வில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படம் பற்றி இயக்குநரிடம் பேசியபோது, ‘‘ஈகை வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகவிருக்கிறது” என்றார்.

சஸ்பென்ஸ் நிறைந்த சமூக கருத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், மும்பையில் நடைபெறவுள்ளது.

உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு – தங்கராஜ் லட்சுமி நாராயணன், ஜெ. தினகர்
இசை – தரன்குமார்
ஒளிப்பதிவு – ஸ்ரீதர்
எடிட்டர் – பிரவீன் கே எல்
கலை – த. இராமலிங்கம்
நடனம் – ஸ்ரீதர்
பாடல்கள் – விவேகா, அறிவு
சண்டைப் பயிற்சி – கணேஷ்
மக்கள் தொடர்பு – குணா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here