புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நிகழ்ச்சி ‘ஈகோ இந்தியா.’ ஞாயிறுதோறும் மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஜெர்மனியின் புகழ்பெற்ற டி டபுள்யூ (DW) தொலைக்காட்சி நிறுவனத்துடன் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சி உலகளவிலான சூழல் பிரச்சினைக்கான தீர்வை மையப்படுத்துகிறது.
புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு ஒரு பசுமையான பூமியை படைப்பது எப்படி என்பதை ஒவ்வொரு நிகழ்ச்சியும் விரிவாக காட்சிப்படுத்துகிறது. நீடித்த தன்மைக்கு உத்திரவாதம் தரும் வேளாண் மற்றும் தொழில் உற்பத்தி முறையை எப்படி உருவாக்குவது என்பது தொடர்பாக பல செய்முறை அனுபவங்களையும் சொல்லித் தருகிறது. இதற்காக தமிழ்நாடு தொடங்கி இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் சுற்றுச் சூழலைக் காப்பதற்காக பாடுபடுபவர்களை தேடிக் கண்டுபிடித்து அதை காட்சிப்படுத்துவதோடு அதன் வழியாக பிறருக்கும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி சுவையாக தொகுத்து வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியை பிரியதர்ஷினி தொகுத்து வழங்குகிறார்.