ராணுவ முன்னாள் அதிகாரியாக ஜெய் ஆகாஷ் நடிக்கும் ‘எக்ஸ் ஆர்மி.’ சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகிறது!

ஜெய் ஆகாஷ் ராணுவ முன்னாள் அதிகாரியாக நடிக்கும் படம் ‘எக்ஸ் ஆர்மி.’ இந்த படத்தில் கதாநாயகிகளாக அஷ்மிதா, அக்ஷயா நடிக்க இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, பிரதான வில்லனாக  தினேஷ் மேட்னே, மீசை ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், ராஜ்மித்ரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகிறது.

ஜெய் ஆகாஷ் கதை, திரைக்கதை எழுத சாய் பிரபா மீனா  இயக்குகிறார். இவர் ஜெய்  ஆகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான யோக்கியன் படத்தை இயக்கியவர். ஜெய் ஆகாஷ் இயக்கிய படத்தில் சாய் பிரபா மீனா உதவி இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார்.

ராணுவத்தில் பணிபுரிந்து போரில் வீர காயத்துடன் ஓய்வு பெறும் வீரர் ஜெய் ஆகாஷ் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், பாலியல்  துன்புறுத்தல்களை கண்டு ஆவேசம் அடைகிறார். அப்படியான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க முடிவு செய்யும் ஜெய் ஆகாஷ் எக்ஸ் ஆர்மி மேன்கள், மற்றும் போரில் காயம் அடைந்து ஊனமுற்று இன்னும் தேச பக்தியுடன் இருக்கும் ராணுவ முன்னாள் வீரர்களை படைபோல் திரட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்வோரை தேடிப் பிடித்து பழிவாங்குகிறார். இந்த கதையை ஆக்ஷன் அதிரடியுடன் உருவாகிறது. நாட்டின் எல்லையைக் காப்பாற்றியவர்கள் நாட்டுக்குள் பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தட்டிக் கேட்டு அவர்களை எப்படி காக்கிறார்கள் என்பதே படத்தின்  மையக்கரு.

இந்த படத்தின் தொடக்க விழா பாடல் பதிவுடன்  ஆகஸ்ட் 11; 2023 அன்று நடந்தது. ஜெய் ஆகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கி  சென்னை, பெங்களுர், மும்பையில் நடக்கவிருக்கிறது. படம் இந்த வருட இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது.

படக்குழு:-
ஆர்.ராம்குமார், சி. பி. சதீஷ் குமார் இணைந்து வழங்கும் இப்படத்தை ஏ.சி.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ரூட்’ என்ற படத்தை இயக்கி ஒளிப்பதிவு செய்தவர். ஜெய் விஜயம் படத்துக்கு இசையமைத்த எஸ்.சதீஷ் குமார் இசையமைக்கிறார். துர்காஸ் எடிட்டிங்  செய்கிறார். புதுமையான ஸ்டன்ட் காட்சிகளை விஜய் ஜாகுவார் அமைக்கிறார். ஜோய்மதி நடனம் அமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here