கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர்!

சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு ‘800’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி இயக்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் 5; 2023 அன்று மும்பையில் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் கிரிக்கெட்டின் டெமி காட் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்பட இயக்குநர்கள் வெங்கட் பிரபு, பா.இரஞ்சித் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர். கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மீதான தனது அன்பை இந்த நிகழ்வில் சச்சின் டென்டுல்கர் வெளிப்படுத்தினார்.

முத்தையா முரளிதரனாக வரும் மதுர் மிட்டலின் திரை ஆளுமை, ஆர்.டி.ராஜசேகரின் அற்புதமான ஒளிப்பதிவு, ஜிப்ரானின் இசை டிரெய்லரின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

டிரெய்லரில் இடம்பெற்றுள்ள இறுதி வரிகள் மேலோட்டமாகப் பார்த்தால் எளிமையாகத் தோன்றினாலும் அந்த வரியில் உள்ள உணர்ச்சிகள் ஆழமானது.ஒட்டுமொத்தத் திரையுலகமும், ஊடக உலகமும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் டிரெய்லரை பாராட்டிப் பேசி பகிர்ந்து வருகின்றனர்.

படம் பற்றி…
படத்தில் முரளிதரனாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல் நடித்துள்ளார். இதில் முரளிதரன் மனைவி மதிமலர் ராமமூர்த்தியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய இந்தப் படத்தை புக்கர் பரிசு (2022) பரிசு பெற்ற ஷெஹான் கருணாதிலகா இணைந்து எழுதியுள்ளார்.

நரேன், நாசர், வேலா ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், சரத் லோஹிதாஸ்வா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு: மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ்
இசை: ஜிப்ரான்
ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர் ஐ.எஸ்.சி
எடிட்டர்: பிரவீன் கே.எல்
எழுத்து: எம்.எஸ்.ஸ்ரீபதி & ஷெஹான் கருணாதிலக
தயாரிப்பு வடிவமைப்பாளர்: விதேஷ்
ஆடை வடிவமைப்பாளர்: பூர்தி பிரவின் / விபின் PR
தோற்ற வடிவமைப்பாளர்: அனிதா மட்கர்
ஆக்‌ஷன்: டான் அசோக்
ஸ்போர்ட்ஸ் கோரியோகிராபி: துருவ் பஞ்சாபி
VFX மேற்பார்வை: ஜிதேந்திரா
லைன் புரொடியூசர்: கந்தன் பிச்சுமணி
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here