‘தெரு நாய்கள்’, ‘படித்தவுடன் கிழித்து விடவும்’, ‘கல்தா’, ‘வில்வித்தை’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கிய செ.ஹரி உத்ரா எழுதி இயக்கியுள்ள புதிய படம் ‘எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு.’
இந்த படம், கிராமங்களில் இருந்து இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் கால்பந்து விளையாட்டில் முத்திரை பதிக்கத் துடிக்கும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களுக்கான இடங்களை திறமையின் மூலம் பிடிக்க முயற்சிப்பதும், கால்பந்து வீரர்கள் போட்டிகளுக்கு செய்யப்படுவதன் பின்னணியிலுள்ள அரசியலுமாக பரபரப்பான கதைக்களத்தில் உருவாகிறது.
ஒடுக்கப்பட்டவர்களில் இருக்கிற திறமையாளர்கள் முன்னேறிவிடாமல் அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் தடுக்கின்றன என்பதையும், திறமையாளர்கள் தவிக்கும் போக்கையும் பதிவு செய்கிறது இந்த படம்.
புதுமுகம் சரத் கதாநாயகனாக நடிக்க, அயிரா கதாநாயகியாக நடிக்கிறார். கஞ்சா கருப்பு, அருவி மதன், சோனா ஹைடன், நரேன், இளையா, எஸ்.எம்.டி கருணாநிதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பரமக்குடி, மதுரை, ராம்நாடு பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட உண்மையான கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கி படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். படத்தில் இரவு நேரத்தில் நடக்கும்படியான காட்சிகளை 30 நாட்களுக்கும் மேலாக பரமக்குடியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் நடத்தியுள்ளனர். சண்டைக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவு – வினோத் ராஜா (பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் உதவியாளராக இருந்தவர்)
இசை – ஏ ஜே அலிமிர்ஸாக்
பாடல்கள் – குவைத் வித்யாசாகர், பா. இனியவன், செ. ஹரி உத்ரா
எடிட்டிங் – கிஷோர்