Home சினிமா ஐமேக்ஸ் பதிப்பில் அசத்தல் அனுபவம் தரும் எம்புரான் படத்தின் டிரெய்லர்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு...

ஐமேக்ஸ் பதிப்பில் அசத்தல் அனுபவம் தரும் எம்புரான் படத்தின் டிரெய்லர்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு வாழ்த்து!

நடிகர் மோகன்லால், பிரித்திவிராஜ் கூட்டணியின் இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும், பான் இந்தியப் படமான ‘எம்புரான்’ படத்தின் அதிரடி டிரெய்லரை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமூக வலைதளம் வழியே வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ஐமேகஸ் பதிப்பில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

டிரெய்லரை வெளியிட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ‘எனது அருமை நண்பர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் ‘எம்புரான்’ பட டிரெய்லரை கண்டு ரசித்தேன், மிக அற்புதமான டிரெய்லர். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற கடவுள் ஆசிர்வதிக்கட்டும், படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

இணையம் முழுக்க வைரலாக பரவி வரும் இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அதிரடியான விஷுவல் விருந்தாக அமைந்துள்ளது, லூசிபர் படத்தின் கதையிலிருந்து துவங்கும் இந்த டிரெய்லர், மொத்த அரசியல் சூழல் மற்றும் அதிரடி த்ரில்லர் கதைக்களத்தை நோக்கி நம்மை இழுக்கிறது. கதை, ஸ்டீபன் நெடும்பள்ளி என்கிற குரேஷி ஆப்ரஹாம் உண்மையில் யார் என்பதைச் சுற்றி நகர்கிறது. ஒரே ஒரு முறை எம்.எல்.ஏ ஆனாலும், இந்திய அரசியலின் முக்கிய தலைவராகக் கொண்டாடப்படும் ஸ்டீபன், எப்படி இவ்வளவு அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் பெறுகிறார்? அவருக்குச் சர்வதேச கடத்தல் குழுவுடன் என்ன தொடர்பு இருக்கிறது? இந்த சுவாரஸ்யமான கேள்விகளுக்குத் திரைப்படம் பதில் அளிக்கும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்