கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகையும் சமீபகாலமாக தமிழ், தெலுங்கில் கவனம் பெற்றுள்ளவருமான ராகினி திவேதி கதையின் நாயகியாக நடிக்க, முருகா அசோக்குமார் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இ மெயில்.’
இந்த படம் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.
படத்தில் இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.
மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.
சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளார்கள்.
கதாநாயகிக்கு திடீரென ஒரு ஈமெயில் வருகிறது. அதில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து விளையாடினால் மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக சொல்லப்பட, அந்த விளையாட்டிற்குள் இறங்கிய கதாநாயகி எதிர்பாராத விதமாக ஒரு மாஃபியா கேங்கில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை.
படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ். ஆர். ராஜன் படம் குறித்து பேசியபோது “ஆக்சன் காட்சிகளையும் கண்ணுக்கு விருந்தான பாடல் காட்சிகளையும் அதிக பொருட் செலவில் எடுத்திருக்கிறோம். அது மக்களை ஈர்க்கும்” என்றார்.
படைப்பில் பங்களிப்பு:-
பாடல்கள்: அன்புசெழியன், விஷ்ணு ராம்
பாடல்களுக்கான இசை: அவினாஷ் கவாஸ்கர்
பின்னணி இசை: ஜுபின்
ஒளிப்பதிவு: செல்வம் முத்தப்பன்
படத்தொகுப்பு: ராஜேஷ் குமார்
கலை: கோபி ஆனந்த், கேஜிஎப் ஷியாம், மஞ்சு
ஸ்டண்ட்: மாஸ் மாதா
மக்கள் தொடர்பு: ஏ.ஜான்