பத்திரிகையாளர் ஜியா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்துள்ள குறும்படம் ‘எனக்கொரு WIFE வேணுமடா.’ செபாஸ்டின் அந்தோணி, அக்ஷயா, அனகா, வினிதா, மோனிகா நடித்துள்ள இந்த குறும்படத்தை பிலிம் வில்லேஜ் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார். முழுநீள ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது.
அதையடுத்து இந்த குறும்படம் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. 10 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம், யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.
ஒளிப்பதிவு – அபிஷேக், எடிட்டிங் – பிரசாத், மேக்அப் – பவித்ரா.
ஜியா இயக்கிய ‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படம் கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியானது. இது அவரது இரண்டாவது குறும்படம்.