ஆரி அர்ஜுனன் நடிக்க, எல் ஆர் சுந்தரபாண்டி இயக்கிய ‘4த் ஃப்ளோர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக விஜய் சேதுபதி, ஆர்யா, இயக்குநர் நித்திலன் ஆகியோர் ஃபர்ஸ்ட் லுக்கை சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளனர்.
ஆரி அர்ஜுனனின் நடிப்பில் வித்தியாசமான களத்தில் அதிரடியாக உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தின் நாயகியாக தீப்ஷிகா நடிக்க பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், திரைக்கதையை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் தெரியவரும்.