வாழ்வில் ஜெயிக்கப் போராடும் அண்ணன் தம்பிகள் மூன்று பேர்… ஃபீல் குட் எண்டர்டெயினராக உருவாகும் ‘ஃபேமிலி படம்.’

டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக், சுபிக்‌ஷா நடிக்க, செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் அழகான ஃபீல் குட் எண்டர்டெயினராக உருவாகவிருக்கும் படம் ‘ஃபேமிலி படம்.’

இந்த படம் ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க போராடுகிறார்கள், அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அழகான குடும்பத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி, அனைவரும் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் ஜனரஞ்சக படைப்பாக தயாராகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து வருகிறது. முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், ஆர் ஜே பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்றார்கள்.

படத்தை பெரும் பொருட்செலவில் ‘யூ கே கிரியேஷன்ஸ்’ கே.பாலாஜி தயாரிக்க, ஆர். சின்னப்பன், நதீஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

படக்குழு: ஒளிப்பதிவு: மெய்யேந்திரன்
இசை: அனிவீ
கலை இயக்கம்: கேபி நந்து
எடிட்டிங்: ஆர்.சுதர்ஷன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here