‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ இயக்குநர் ஜேம்ஸ் கன், திறமையான நடிகரான ஜூனியர் என்டிஆருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்!
மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதி கிட்டத்தட்ட வந்துவிட்டது. படம் மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்குள் ரசிகர்களும் உலக அளவில் உள்ள விமர்சகர்களும் படம் குறித்தான தங்களது எதிர்பார்ப்பை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.இந்திய ஊடகங்களுக்கு சமீபத்தில் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ இயக்குநர் ஜேம்ஸ் கன் பேட்டியளித்தபோது, ‘கார்டியன்ஸ் பிரபஞ்சத்தில் ஒரு இந்திய நடிகரை அறிமுகப்படுத்த முடிந்தால் அது யாராக இருக்கும்?’ என்ற கேள்விக்கு, ”ஜூனியர் என்டிஆருடன் வேலை செய்ய விரும்புகிறேன். ‘RRR’ படத்தில் அவர் அற்புதமாகவும் நேர்மறைத் தன்மையுடனும் இருந்தார்’ என்றார்.
ஜேம்ஸ் கன்னின் இந்த விருப்பம், உலக அளவில் இந்திய சினிமா பிரபலமடைந்து வருவதற்கும், சர்வதேச பார்வையாளர்களிடம் அது ஏற்படுத்தும் தாக்கத்துக்கும் சான்றாக கருதப்படுகிறது.