அதர்வாவுக்கு வில்லனாக ‘குட்நைட்’ மணிகண்டன் நடிக்கும் ‘மத்தகம்.’ ஆகஸ்ட் 18-முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியீடு.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்காக, அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல், டிடி நடிப்பில், பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள வெப் சீரிஸ் ‘மத்தகம்.’

நேற்று வெளியிடப்பட்ட இந்த வெப் சீரிஸின் டிரெய்லர், அதர்வா, மணிகண்டனின் அதிரச்செய்யும் ஆக்சன் அதிரடியில், ஒரு அட்டகாச பொழுதுபோக்கை மத்தகம் தருமென்பதை உறுதி செய்துள்ளது.

சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்ததில் வரும் ஆகஸ்ட் 18 முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட ஏழு மொழிகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘குட் நைட்’ பட கதாநாயகன் மணிகண்டன் முதல் முறையாக வில்லனாக நடிக்கும் இந்த சீரிஸில் அதர்வா நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

சீரிஸை Screen Scene Media Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. தர்புகா சிவா இசையமைத்துள்ளார். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். பரபரப்பான ஆக்சன் காட்சிகளைப் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். சுரேஷ் கல்லரி கலை இயக்கம் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here