சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படம் பார்க்க முதல் நாள் முதல் காட்சிக்காக 2000 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த காசாகிராண்ட்! பணியாளர்கள் குஷி!

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுள் முதன்மை வகிக்கும் காசாகிராண்ட், உலகெங்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தை தனிச்சிறப்பான முறையில் வரவேற்று கொண்டாடியிருக்கிறது.

தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில், வெளிவந்திருக்கும் அதிரடி வெற்றி திரைப்படமான ‘ஜெயிலர்’ படத்தை தனது பணியாளர்கள் கண்டு ரசித்து கொண்டாடுவதற்காக சென்னை மாநகரில் 10 திரையரங்குகளில் தனது பணியாளர்களுக்காக 2000 முதல் நாள் முதல் காட்சிக்கு (FDFS) டிக்கெட்டுகளை பிரத்யேகமாக முன்பதிவு செய்திருந்தது.

பணியாளர்களின் நலவாழ்வு மீது எப்போதும் அக்கறை கொண்டிருக்கும் காசாகிராண்ட், அவர்களின் ஆர்வத்தையும், விருப்பத்தையும் பூர்த்திசெய்யும் வகையில், சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தது.

இயக்குநர் நெல்சனின் சமீபத்திய படைப்பாக்கமான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் தனது அதிரடியான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி உலகெங்கிலும் உள்ள தனது இரசிகர்கள் மட்டுமின்றி, நல்ல திரைப்படங்கள் மீது ஆர்வம் கொண்டிருக்கும் இரசிகர்களின் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறார்.

பணியாளர்கள் நலனே முதன்மையானது என்ற கோட்பாட்டை தனது மைய செயல்பாடாகக் கொண்டிருக்கும் காசாகிராண்ட், பணியாளர்களின் நலனை உறுதிசெய்யும் அணுகுமுறையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதிக அக்கறையுடனும், கனிவுடனும் தனது பணியாளர்களை நடத்துவதில் காசாகிராண்ட் வெளிப்படுத்தி வரும் பொறுப்புறுதி அனைவரும் அறிந்ததே.

ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண சூப்பர் ஸ்டாரின் இலட்சக்கணக்கான இரசிகர்கள் அலைமோதுகின்ற நிலையில் தனது பணியாளர்களுக்காக இதற்கான டிக்கெட்டுகளை வெற்றிகரமாக முன்பதிவு செய்து அவர்களை மகிழ்ச்சிக்கடலில் காசாகிராண்ட் மீண்டும் ஒருமுறை ஆழ்த்தியிருக்கிறது. தனது பணியாளர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியையும், நலவாழ்வையும், மன திருப்தியையும் உறுதிசெய்வதில் காசாகிராண்ட் வெளிப்படுத்தியிருக்கும் பல நிகழ்வுகளுள், ஜெயிலர் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை பணியாளர்களுக்கு வழங்கியிருப்பதும் ஒன்றாகும்.

சென்னையில் 10 திரையரங்குகளில் 2000 FDFS பிரத்யேக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருப்பதன் வழியாக தலைவரின் இத்திரைப்படத்தை காசாகிராண்ட் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது; அதுமட்டுமன்றி ரஜினிகாந்த்-ன் திரைப்படங்கள் சமூகத்தில் கொண்டுவரும் ஒருமித்த உணர்வையும், உற்சாக கொந்தளிப்பையும் சமூகத்தின் ஒரு அங்கமாக தானும் தனது பணியாளர்களோடு சேர்ந்து பகிர்ந்துகொள்வதை காசாகிராண்டின் இந்த வித்தியாசமான நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.

பணியில் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் உற்சாகமாக ஒருங்கிணைந்து பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்ற இரு அம்சங்களையும் காசாகிராண்ட் பதிக்கிறது. சிறப்பான பணிச்சூழலை உறுதிசெய்வது மீது காசாகிராண்ட் கொண்டிருக்கும் பொறுப்புறுதியையும், பணியாளர்களின் மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளும் பல்வேறு நல திட்டங்களையும் கோடிட்டு காட்டுவதாக இந்நடவடிக்கை அமைந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here