கன்னடத்தின் முன்னணி ஹீரோ சிவராஜ்குமாரின் அதிரடி சண்டை காட்சிகள் ஆக்ஷன் திரில்லர் பான் இந்திய படம் ‘கோஸ்ட்.’
படத்தில் அனுபம் கெர், ஜெயராம், பிரசாந்த் நாராயணன், அர்சனா ஜொயிஸ், சத்யபிரகாஷ், தட்டன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் தலைசிறந்த சண்டைக் காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் படமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனமுடன் செயல்பட்டு வருகிறார் இயக்குநர் ஸ்ரீனி.
படம் தசரா பண்டிகை கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 19; 2023 அன்று கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருக்கிறது.
தமிழ் பதிப்புக்கு சிவராஜ் குமார் நேரடியாக டப்பிங் பேசி இருக்கிறார் என்பது படத்தின் தனித்துவம்.
இந்த படத்தின் தெலுங்கு டிரெய்லரை இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டார். தமிழ் பதிப்பை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகள், அனல் பறக்கும் வசனங்களுடன், அதிரடியான பின்னணி இசையுடன் மிரட்டுகின்றன.
இந்த படத்தை முன்னணி அரசியல் தலைவரும், தயாரிப்பாளருமான ‘சந்தோஷ் புரொடக்ஷன்ஸ்’ சந்தோஷ் நாகராஜ் தயாரித்துள்ளார். முன்னணி பாலிவுட் வினியோகஸ்தர் ஜெயந்திலால் கடா பென் மூவிஸ் சார்பில் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமத்தை பெற்றிருக்கிறார்.
படக்குழு:-
இசை: அர்ஜூன் ஜான்யா
ஒளிப்பதிவு: மகேந்திர சிம்ஹா
வசனம்: பிரசன்னா வி.எம்., மஸ்தி
சண்டை பயிற்சி: சேத்தன் டி சௌசா, வெங்கட் (ஐதராபாத்), அர்ஜூன் ராஜ், மாஸ் மாதா
படத்தொகுப்பு: தீபு எஸ் குமார்
தயாரிப்பு வடிவமைப்பு: மோகன் பி கெரெ
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார்