சூர்யா வெளியிட்ட, ஜீ. வி. பிரகாஷின் ‘ரெபல்’ பட டீசருக்கு பெருகும் வரவேற்பு!

ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரெபல்.’

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கியிருக்கும் இந்த படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

உண்மை சம்பவங்களை தழுவிய அதிரடி ஆக்சன் என்டர்டெய்னரான இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் படத்தின் டீசரை சூர்யா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார். டீசரில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றமும், ஆவேசமான கதாபாத்திர குணாதிசயமும் ரசனையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் டீசர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படக்குழு:-
திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாள, கலை இயக்கத்தை உதயா கவனிக்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளை சக்தி சரவணன் அமைத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here