சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் அதிரடி நடிப்பால் மிரட்டப்போகும் பாபிதியோலின் வெறித்தனமான கதாபாத்திர தோற்றம் வெளியீடு!

சூர்யா நடிக்க, சிவா இயக்கத்தில் உருவாகிற ‘கங்குவா’ படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்களிடமும் வர்த்தக வட்டாரங்களிலும் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு பெரியளவில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் இந்தி சினிமாவில் புகழ் பெற்ற பாபி தியோலின் ‘உதிரன்’ கதாபாத்திரத்தின் வெறித்தனமான புது போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதில் பாபி தியோல் தலையில் மான் கொம்போடு வித்தியாசமான உடையில் கூட்டத்திற்கு மத்தியில் மிரட்டலான தோற்றத்தில் இருக்கிறார். பாலிவுட்டில் பல படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டிய பாபி தியோல் இந்த படத்திலும் அசத்தலான நடிப்பை தரவிருக்கிறார்.

இந்த படத்தின் புரோமோ டீசர் சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியானது.

‘கங்குவா’வின் உலகம் புதுவிதமாக அமைந்து பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் புதிய காட்சி அனுபவத்தை அளிக்கும். மனித உணர்வுகள், திறமையான நடிப்பு மற்றும் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய அளவிலான அதிரடி காட்சிகள் படத்தின் முக்கிய மையமாக இருக்கும். இந்த பான்-இந்தியன் படமான ‘கங்குவா’வின் பணிகள் உற்சாகமாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. மேலும், சமீபத்தில் நடிகர் சூர்யா தனது படப்பிடிப்பை முடித்துள்ளார்.

சூர்யா மற்றும் திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்திருக்க, ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட ஸ்டுடியோ கிரீன் சிறந்த விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நடிகர் சூர்யா ரசிகர்களின் உற்சாகத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் படம் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்களை படக்குழு அடுத்தடுத்து கொடுக்க இருக்கிறது.

ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் ‘சிங்கம்’, ‘பருத்தி வீரன்’, ‘சிறுத்தை’, ‘கொம்பன்’, ‘நான் மகான் அல்ல’, ‘மெட்ராஸ்’, ‘டெடி’, சமீபத்தில் வெளியான ‘பத்துதல’ போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்துத் தென்னிந்தியத் திரையுலகில் தயாரிப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

படைப்பில் பங்களிப்பு:-
தயாரிப்பு: கே.இ. ஞானவேல்ராஜா
இணை தயாரிப்பாளர்: நேஹா ஞானவேல்ராஜா
ஸ்டுடியோ கிரீன் CEO: G. தனஞ்ஜெயன்
எடிட்டர்: நிஷாத் யூசுப்
ஆக்‌ஷன்: சுப்ரீம் சுந்தர்
வசனங்கள்: மதன் கார்க்கி
எழுத்தாளர்: ஆதி நாராயணா
பாடல் வரிகள்: விவேகா, மதன் கார்க்கி
தலைமை இணை இயக்குநர்: ஆர்.ராஜசேகர்
ஆடை வடிவமைப்பாளர்: அனு வர்தன் (சூர்யா) & தட்ஷா பிள்ளை,
ஆடைகள்: ராஜன்
நடனம்: ஷோபி
ஒலி வடிவமைப்பு: டி உதயகுமார்
ஸ்டில்ஸ்: சி.எச். பாலு
விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா
கிரியேட்டிவ் விளம்பரங்கள்: BeatRoute
டிஜிட்டல் விளம்பரம்: டிஜிட்டலி
VFX: ஹரிஹர சுதன்
3டி: பிரைன்வைர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: ஆர்.எஸ். சுரேஷ்மணியன்
தயாரிப்பு நிர்வாகி: ராமதாஸ்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு: ஈ.வி. தினேஷ் குமார்
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஏ.ஜி.ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here